பாஜகவிற்கு ஷாக் கொடுத்த முதல்வர்.. முதலில் சட்டம், பிறகு பாடம்.. ஒரே அடியாக ஓரம்கட்டிய காங்கிரஸ் அதிர்ச்சியில் முக்கிய தலைவர்கள்

Update: 2023-06-17 02:39 GMT

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

கர்நாடகாவில் 2022ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இது வகை செய்தது.

திருமணம் உள்ளிட்ட சொந்த காரணங்களுக்காக மதம் மாறுவோர் 30 நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை இதில் சேர்க்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்தை மீறி மதமாற்றம் செய்ததாக 10க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மத போதகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வியாழன் அன்று முதல்வர் சித்தாராமையா தலைமையில் நடந்த கர்நாடாகா அமைச்சரவை கூட்டத்தில், மத மாற்ற தடை சட்டத்தை ரத்து

செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா, ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் கர்நாடக சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு பள்ளிகளின் பாடநூல்களில் இடம்பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் பற்றிய பாடத்தை நீக்கவும் முடிவு செய்துள்ளது. சாவித்திரிபாய் பூலே, சக்ரவர்த்தி சுலிபெலெ, இளம் இந்திரா காந்திக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்கள், அம்பேத்கர் பற்றிய கவிதைகள் ஆகியவற்றை பாட நூல்களில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸின் இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்