கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு..அதிர்ச்சியில் திருப்பதி தேவஸ்தானம் - காரணம் என்ன..?
திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியை விமானம், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென, திருப்பதி தேவஸ்தானம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை, சுவாமிக்கு சிறப்பு பூஜை என திருப்பதி ஏழுமலையான் கோவில் எப்போதும் விழாக்கோலமாகவே காட்சியளிக்கும். பச்சிளங்குழந்தை முதல் தள்ளாடும் முதியவர் வரை ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு படையெடுப்பர்.
இப்படி பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருப்பதியில் தீவிரமாகவே இருக்கும்.
பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறு த்தல் உள்ளதால், கோவில் பாதுகாப்பு மீது மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் கொண்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலை சுற்றியும், 90 பேர் கொண்ட ஆக்டோபஸ் படையினர், துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கென்று ஆகம விதிகளும் உள்ளது. அதன் படி திருப்பதி மலையில், அசைவ உணவு களுக்கும், புகைப்பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்களும் பறக்க தடை விதித்து தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
ஆனால் சமீப காலமாக ஏழுமலை கோவில் மீது விமானங் கள், ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர்கள் பறந்து செல்வது வாடிக்கையாகியுள்ளது.
கடப்பாவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் விமானங்கள் திருப்பதி வழியாக செல்வதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் பறந்து, தீவிரவாதிகள் உளவு பார்க்கின்றனரா என அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ச்சியில் உள்ள திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையான் கோவில் பகுதி விமானங்கள், ஹெலிகாப் டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் ஆகம விதிகள் மீறப்படுவதாகவும், இதனால் பக்தர்கள் அதிருப்தியடை வதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆனால் மானம் மற்றும் ஹெலிகாப்டர் களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக ஏழுமலையான் கோவிலை அறிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.