அயனாவரம் அருகே வேருடன் சாய்ந்த மரத்தால் கார் நொறுங்கியது. சென்னை, அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது காரை வெங்கடேஷ பெருமாள் காலணி 2வது தெருவில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை காரை எடுக்க வந்து பார்த்த போது, சாலை அருகே இருந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியிருந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.