சென்னை ஸ்டேஷனில் நின்ற காதல் ஜோடி சூட்கேஸில் பிரபல ஹோட்டல் ஓனரின் உடல் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. குலைநடுங்க வைத்த CCTV

Update: 2023-05-27 03:23 GMT

கேரளாவில் காணாமல் போன ஹோட்டல் உரிமையாளரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பின்னணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு....

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் பகுதியை சேர்ந்தவர் சித்திக்... கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்த இவர், திடீரென காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்துள்ளனர்....

இதனடிப்படையில், சித்திக்கை தேடி வந்த போலீசார் , சித்திக்கின் வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து பணம் எடுக்கப்படும் SMS அவருடைய மகனின் செல்போனுக்கு வருவதை கண்டு சந்தேகமடைந்தனர்...

விசாரணையில், சித்திக்கின் வங்கி கணக்கில் அவருடைய மகனின் செல்போன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவர, வங்கிக்கு விரைந்த போலீசார், அங்குள்ள சிசிடிவியை கைப்பற்றி சோதனை நடத்தினர்...

அதில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வங்கிக்குள் வந்து பணம் எடுத்து செல்வது பதிவாகியிருந்தது...

வங்கியினுள் வந்து பணம் எடுத்து சென்ற இளைஞர், சித்திக் நடத்தி வந்த ஹோட்டலில் 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த முகமது சிபில் என்பது தெரியவர விவகாரம் மேலும் சூடுபிடித்தது...

முகமது சிபிலின் புகைப்படத்தை மாநிலம் முழுவதும் அனுப்பி அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பாலக்காடு அருகேயுள்ள அட்டைபாடி காட்டுப்பகுதியில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், இரண்டு சூட்கேஸில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது...

கடந்த சில மாதங்களில் கேரளாவில் காணாமல் போனவர்களின் விவரங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட உடல் சித்திக்கின் உடல் என்பது தெரியவந்தது...

மே 18 ஆம் தேதி மாயமான சித்திக், அன்று இரவு இராங்கிபாளத்தில் உள்ள லாட்ஜில் இரண்டு அறைகளை புக் செய்ததும், அவருடன் முகமது சிபில், பர்கானா

மற்றும் ஆஷிக் என 3 பேர் உடன் தங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது...

இதில், லாட்ஜில் இருந்து மறுநாளே மூன்று பேர் 2 சூட்கேஸூடன் வெளியேறுவது சிசிடிவி காட்சியில் பதிவாகிருந்த நிலையில், அதில் சித்திக் இல்லாததாலும், மூவரும் விடுதியில் வைத்தே சித்திக்கை கொன்றிருப்பதும் போலீசாரால் யூகிக்கப்பட்டது...

தொடர்ந்து, முகமது சிபிலின் புகைப்படத்தை அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி கேரள போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்த முகமது சிபிலை சுற்றி வளைத்த ரயில்வே போலீசார், கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்...

இதில், உடன் இருந்த பர்கானா என்ற பெண் முகமது சிபிலின் காதலி என கூறப்படும் நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையின் நோக்கம் என்ன? மூவருடனும் மே 18 அன்று சித்திக் லாட்ஜில் அறையெடுத்து தங்கியதற்கான காரணம் என்ன? சொத்தை அபகரிக்கும் முயற்சியில் அரங்கேற்றப்படதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்