கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது | Srilanka | TN

Update: 2023-03-04 11:18 GMT

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக புனித அந்தோணியார் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அந்தோணியார் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புனித அந்தோணியார் திருவிழாவை ஒட்டி,வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கூடி னர். பின் கச்சத்தீவிற்கு பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்ட படகின் வரிசைப்படி பக்தர்கள் சோதனை செய்யப்பட்டு படகுகளில் புறப்பட்டு சென்றனர். காலை 7.30 மணிக்கு திருவிழா நிறைவாக திருச்செப மாலையும், திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். கச்சத்தீவை சுற்றி ஏராளமான ரோந்து கப்பல்களை யும் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்