நடு சாலையில் பயங்கர வெள்ளம்.. வாகனத்தோடு இழுத்து செல்லப்பட்ட நபர் - பதறவைக்கும் காட்சிகள்
மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழையால் விமானம் மற்றும் ரயில்வே நிலையங்களில் மழைநீர் சூழ்ந்தது. புனே ரயில்வே நிலையத்திலும், நடைமேடையிலும் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழைநீர் சூழ்ந்ததால் ஒருசில ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் சிவாஜிநகர் ரயில் நிலையத்தில் இருந்து செல்ல தனியார் வாகனங்கள் 600 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. புனே சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் சூழ்ந்ததால், விமானங்கள் தரையிறங்குவது தாமதமானது.