ஊராட்சி தலைவர்-கவுன்சிலர் குடும்பத்தினர் இடையே பயங்கர சண்டை.. கல்லை தூக்கி வீசிய பெண்கள்
காஞ்சிபுரம் அருகே திட்ட பணி கல்வெட்டு வைப்பது தொடர்பான பிரச்சினையில் ஊராட்சி தலைவர்- வார்டு உறுப்பினரின் குடும்பத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
திம்மசமுத்திரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டடத்திற்கு கல்வெறு வைப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், வார்டு உறுப்பினர் பிரியாவின் அம்சநாதனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் வார்டு உறுப்பினரின் உறவினர்கள் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, எச்சரித்து அனுப்பினர். இதனிடையே, ஊராட்சி தலைவர் குடும்பத்தினரும், வார்டு உறுப்பினரின் குடும்பத்தினரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.