பழங்குடியினர்கள் இடையே பயங்கர மோதல், 4 நாள் சண்டையில் 56 பேர் கொலை - தொடரும் ரத்த வெறியாட்டம்...
ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 56 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
தெற்கு சூடானில் பல ஆண்டு காலமாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது... அங்குள்ள பழங்குடியின மக்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடும் நிலையில், ஆயிரக்கணக்கான உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன... அந்த வகையில் தற்போது கிழக்கு ஜொங்லேய் மாநிலத்தில் 4 நாட்களாக நடந்த சண்டையில் 56 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்... ஆயுதமேந்திய நுயர் இன இளைஞர்கள் கடந்த 24ம் தேதி குருமுக் மற்றும் லிகுவாங்கோல் பகுதிகளில் முர்லே சமூகத்தைச் சேர்ந்த மக்களைத் தாக்கத் துவங்கினர்... இதில் 56 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது...