"எங்கும்,எதிலும் லஞ்சம்; 'நமக்கு நாமே' ஒரு தோல்வியுற்ற திட்டம்"-திமுக கவுன்சிலரின் பேச்சால் சலசலப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி மன்றக் கூட்டத்தில், "நமக்கு நாமே திட்டம்", ஒரு தோல்வியுற்ற திட்டம் என்று திமுக கவுன்சிலர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய 10-வது வார்டு கவுன்சிலரான முருகன், வீட்டுத் தீர்வை ரசீது பெற அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய உள்ளது என்றும், நமக்கு நாமே திட்டம் என்பது தோல்வியுற்ற ஒரு திட்டம் என்றும் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதேபோல், ஒவ்வொரு திட்டத்துக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக் கூறி, அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.