தந்தி செய்தி எதிரொலி - அல்லேரி மலையில் சாலை - "வனத்துறைக்கு கைமாறும் 6 ஹெக்டேர் நிலம்"

Update: 2023-07-25 03:37 GMT

தந்தி டிவி செய்தி எதிரொலியாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைக்க எடுக்கப்படும் நிலத்திற்கு பதிலாக, வேலூர் சத்துவாச்சாரி மலையில் வனத்துறைக்கு 6 ஹெக்டேர் நிலம் வழங்க, இடம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

சாலை வசதி இல்லாததால், அல்லேரி மலை பகுதியில் பாம்பு கடித்து இருவர் உயிரிழந்தனர். இந்த செய்தி வெளியான நிலையில், சாலை அமைக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அல்லேரி மலை பகுதியில் நிலம் எடுக்கும் பணியில் வருவாய்த்துறை ஈடுபட்டது. சாலை அமைக்க நிலம் கொடுக்க முன் வந்த வனத்துறை, இந்த நிலத்திற்கு மாற்றாக, வருவாய்த்துறைக்கு சொந்த இடத்தை இருமடங்காக தர வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதை வருவாய்த்துறை ஏற்ற நிலையில், வேலூர் சத்துவாச்சாரி மலையில், வனத்துறைக்கு, 6 ஹெக்டேர் நிலம் வழங்க, இடம் அளவீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதையடுத்து, அல்லேரி மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்