"டீச்சர்ஸ் ரொம்ப கேம் ஆடிட்டாங்க...ஆனா பாதிக்கப்பட்டது என் குடும்பம்" - ஆசிரியரின் மனைவி பேட்டி
- பழிவாங்கும் நோக்கில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசுப் பள்ளி ஆசிரியரின் மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த கார்த்திகை சாமி என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தததாக புகார் அளிக்கப்பட்டது.
- அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- இந்த புகார் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, புகார் கடிதம் அளித்தவர்களில் ஒருவரான ஆணைக்குப்பத்தை சேர்ந்த வீரபாண்டியன் என்பவர், அந்தப் பகுதியில் வசிக்கவே இல்லை என தெரியவந்தது.
- அதனைத் தொடர்ந்து, தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்திய சக ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கார்த்திகை சாமி புகார் அளித்துள்ளார்.
- மேலும், கார்த்திகை சாமியின் மனைவி சகாயமேரி கூறுகையில், தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்த தனது கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.