தமிழகத்தில் பாதிப்பு 10-ஆக உயர்வு...அனைவரும் தயாராக இருக்க உத்தரவு
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 ஆம் தேதி வரை, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த இருவருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 889 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாதிரிகள் மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.