தமிழகமே எதிர்பார்த்த ஸ்ரீமதி வழக்கின் முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்
ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று வழங்கப்படும் என்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் அறிக்கையின் நகலை கேட்டு, ஸ்ரீமதி வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, ஜிப்மர் குழுவின் அறிக்கை இன்று வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.