தமிழக அரசின் வேலை நேர அதிகரிப்பு சட்டம் - "பாஜக அரசே நிறைவேற்ற தயங்கிய..." எம்.பி. திருமாவளவன் கடும் எதிர்ப்பு

Update: 2023-04-22 10:22 GMT

தமிழக அரசின் வேலை நேர அதிகரிப்பு சட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பால், மத்திய அரசே இந்த சட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்