ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்ததுடன், ஒரு விசைப்படகையும், 6 பேரையும் சிறை பிடித்தனர். தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மீனவர்களின் சிறை பிடிப்பை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.