ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் | SwapnaSuresh | Pnarayi

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-09 02:03 GMT

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா மற்றும் மகள் வீனா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பதிலில், பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிலர் குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்