காலையில் கையில் அறுவை சிகிச்சை.. மாலையில் பெண் திடீர் உயிரிழப்பு-மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

Update: 2022-10-11 05:08 GMT

காலையில் கையில் அறுவை சிகிச்சை.. மாலையில் பெண் திடீர் உயிரிழப்பு-மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

கடலூரில் தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பெற்ற பெண் திடீரென உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை அடித்து

உடைத்தனர். கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா என்பவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு

சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள்

ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவிற்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு உறவினர்களுடன் காலை முதல் நன்றாக பேசிக்கொண்டிருந்த மீனா,

பிற்பகலில் திடீரென உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கையில் ஆபரேஷன் செய்த

நிலையில் உயிரிழக்க வாய்ப்பு இல்லை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால் தான் மீனா இறந்ததாக கூறி மருத்துவமனையின்

கண்ணாடியை அடித்து உடைத்தனர். அப்போது அதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்