குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் தடையை எதிர்த்து மனு...மனுக்களை பிப்.6ல் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

Update: 2023-01-30 22:02 GMT

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப் படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.

இது தொடர்பான வீடியோக்களை யூடியூப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர கடந்த 21ம் தேதி ஒன்றிய அரசு தடை விதித்தது.

இந்த தடையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதே போல் மூத்த பத்திரிகையாளர் என். ராம், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இருவரும் தனித்தனியாக ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரிட் மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் முறையிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.

பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு விமர்சனம் செய்திருக்கிறார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் நீதி மற்றும் விரைவான விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்தான் இது என விமர்சனம் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்