கர்நாடக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.. பாஜகவிற்கு ஆதரவு என அறிவித்த பிரபல நடிகை சுமலதா
- கர்நாடகாவில் மாண்டியா தொகுதியின் சுயேச்சை எம்.பியும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் பாஜகவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
- மைசூரு-பெங்களூரு இடையே 10 வழிச்சாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மாண்டியாவுக்கு வருகை தரவுள்ள நிலையில் தனது ஆதரவை பாஜகவுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
- இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் அரசியலில் இருக்கும் வரை, தமது மகன் அபிஷேக் அரசியலுக்கு வரமாட்டார் என்றும், அவர் வாரிசு அரசியலுக்கு எதிரானவர் என்றும் உறுதியளித்தார்.
- விரைவுச் சாலையை திறந்து வைப்பதற்காக நாட்டின் பிரதமர் மாண்டியா மாவட்டத்திற்கு வருகை தந்தது மாண்டியாவுக்கு கிடைத்த பெருமை எனவும் சுமலதா அறிக்கையில் கூறியுள்ளார்.
- வரும் சட்டமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அதற்காக பாஜகவில் இணைவார் என கூறப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் தனது முடிவை மாற்றி தனது ஆதரவு பாஜகவிற்கு இருக்கும் என சுமலதா அறிவித்துள்ளார்.