திடீரென சத்தத்துடன் ஒலித்த சைரன்.. கடற்கறையில் இருந்து அலறி அடித்து ஓடிய மக்கள்
தாக்குதலை நிறுத்துவதாக பாலஸ்தீன் அறிவித்துள்ள நிலையிலும், தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். டெல் அவிவ் நகரில் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டதால் எச்சரிக்கை சைரன் எழுப்பப்பட்டது. இதனால், கடற்கரையில் இருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். அதே நேரத்தில், தாக்குதல் நிறுத்துவதாக இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அஸ்கெலான் நகரில் நள்ளிரவிலும் எச்சரிக்கை சைரன் ஒலித்தது. இதனால், நள்ளிரவிலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.