ராமேசுவரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்! - அச்சத்தில் மக்கள் ..

Update: 2023-05-07 12:32 GMT

ராமேசுவரம் கடல் திடீரென உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வழக்கம் போல் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் புனித நீராடிக் கொண்டிருந்தனர்... அப்போது கடலானது திடீரென சுமார் 50 மீட்டர் உள்வாங்கியது... கடலுக்கடியில் இருந்த கடல் பாசிகள் புற்கள், பாறைகள் மற்றும் கடலுக்குள் போடப்பட்ட சாமி சிலைகள் அனைத்தும் வெளியே தெரிந்தது... இதனால் சுற்றி இருந்த பக்தர்களும் மீனவர்களும் அச்சத்தில் உறைந்தனர். இது குறித்து மத்திய கடல் ஆராய்ச்சியாளரிடம் கேட்டபோது, காலநிலை மாற்றம் காரணமாக திடீரென கடல் உள்வாங்கும் எனவும் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்