தங்க வியாபாரி வீட்டில் திடீர் சோதனை.. ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை - கோவையில் பரபரப்பு

Update: 2023-07-20 05:55 GMT

கோவை கெம்பட்டி காலனி மைதானம் பகுதியில் உள்ள தங்க கட்டி வியாபாரி சீனிவாசன் என்பவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சீனிவாசன் தங்க கட்டி வியாபாரம் செய்து வரும் நிலையில், அவர் சரியாக ஜிஎஸ்டி கட்டாத காரணத்தினால் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் முழு தகவல்கள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்