"வெறும் ரூ.7000" வழக்கில் இருந்து தப்ப பிரபல சிலை கடத்தல் மன்னனின் மாஸ்டர் பிளான்..? வெளியான திடுக் தகவல்
"வெறும் ரூ.7000" வழக்கில் இருந்து தப்ப பிரபல சிலை கடத்தல் மன்னனின் மாஸ்டர் பிளான்..? வெளியான திடுக் தகவல்
வெளிநாட்டில் உள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக சிலை கடத்தல் வழக்கில் விதிக்கப்பட்ட ஏழாயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தாமல் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் காலம் தாழ்த்துவதாக தகவல் வெளியாகி உள்ளது..
சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சிலைகளை கடத்தி விற்பனை செய்த விவகாரத்தில் சிலை கடத்தல் வழக்குகளில் சிக்கிய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், கடந்த 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜெர்மன் குடியுரிமை பெற்ற சுபாஷ் கபூரை தமிழக சிறையில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை ஜெர்மன் அரசு அதிரடியாக ரத்து செய்தது.
இந்த சூழலில் சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 ஆண்டுகள் ஏற்கனவே சிறையில் இருந்த போதிலும் சுபாஷ் கபூரை ஜெர்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளில் விசாரணையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையான 7000 ரூபாயை செலுத்தாமல் சுபாஷ் கபூர் காலம் தாழ்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.