"11ம் வகுப்பிற்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை" - ஆசிரியர்கள் வேதனை

Update: 2023-05-20 01:58 GMT

11ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்ற இலக்குடன் மாணவர்கள் பயணிப்பதால் தான் அவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்கப்பெறுவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கடந்த ஆண்டு, 11ம் வகுப்பை சேர்ந்த 815 மாணவர்கள், கணித பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர் ஆனால், இந்த ஆண்டு 17 மாணவர்கள் மட்டுமே நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். இந்நிலையில், 11ஆம் வகுப்பு மதிப்பெண்களை மாணவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும், வெற்றி பெற்றால் போதும் என்ற இலக்குடன் பயணிப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்