மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் - போலீசார் தாக்கல் செய்த அதிர்ச்சி ரிப்போர்ட்
காரைக்காலில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியிடம் கைப்பற்றிய எலி பேஸ்ட்டும், மாணவன் உடலில் எடுத்த விஷமருந்தும் ஒத்துப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்காலை அடுத்த தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக கடந்த செப்டம்பர் 2ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். அதனை தொடர்ந்து, மாணவியின் தாயார் சகாராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு புதுச்சேரி சிறையில் அடைகப்பட்டார். இதற்கிடையே காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் எலி மருந்து வாங்கிய கடைகளில் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளையும், சிறுவனின் உடல் கூராய்வு வீடியோ பதிவுகளையும் நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்தனர். அதிலும் குறிப்பாக குற்றவாளியிடம் கைப்பற்றிய எலி பேஸ்ட்டும், மாணவன் உடலில் எடுத்த விஷமருந்தும் ஒத்துப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.