பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி.. அதிர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள்
கடலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பச்சிளம் சிசு ஒன்று சடலமாக கிடந்த நிலையில் அதை அந்த பள்ளியை சேர்ந்த சிறுமியே பெற்றெடுத்து வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புவனகிரியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை அருகே இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சடலமும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவி ஒருவரே இந்த குழந்தையை பெற்றெடுத்தது உறுதியானது.
சகோதரன் உறவு முறை கொண்ட 10 ஆம் வகுப்பு சிறுவனுடன் அந்த பெண் நெருங்கி பழகியதில் கர்ப்பமாகி உள்ளார்.
இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்த அவர் சம்பவத்தன்று குழந்தையை பெற்றெடுத்து கழிவறை அருகே வீசி விட்டு வந்ததும் தெரியவந்தது.
பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் வெளிவந்த நிலையில் அந்த கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.