நடிகர் ரஜினி காந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் , பல தளங்களில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர்,
புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாகவும், இது பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினியின் பெயர், புகழ், புகைப்படம், குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்த ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.