கள்ளப்படகு மூலம் இந்திய எல்லைக்கு வந்த 8 பேர்... தீவிர விசாரணையில் கடலோர காவல்படையினர்

Update: 2023-03-29 02:15 GMT
  • இலங்கையை சேர்ந்த சிலர் இந்திய கடல் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மூன்றாம் மணல் திட்டில் இறங்கி இருப்பதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
  • அதன் பேரில் ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று பார்த்த போது இரண்டு குடும்பங்களை சேர்ந்த எட்டு பேர் இலங்கை தலைமன்னாரிலிருந்து ஒன்னேமுக்கால் லட்ச ரூபாய், இலங்கை பணத்தை கொடுத்து கள்ளப்படகு மூலம் வந்திருப்பது தெரிய வந்தது.
  • அவர்களை மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்த கடலோர காவல் படையினர், மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • தனுஷ் கோடி காவல் நிலையத்தில் வைத்து மரைன் போலீசார் அவர்களிடம் முதற் கட்ட விசாரணையில் மேற்கொண்டனர்.
  • விசாரணையில் எட்டு பேரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அகதிகளாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  • விசாரணைக்கு பின் அவர்கள் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்