"தகுதி நீக்கம் செய்யும் அளவிற்கு விதிமீறல்"ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது SPவேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து, எஸ்.பி. வேலுமணி வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.