நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு தவிக்க விட்ட மகன்கள்... 7 ஆண்டுகளாக சாப்பாட்டுக்காக திண்டாடிய பெற்றோர் - சேலம் ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு

Update: 2023-01-23 23:37 GMT

Full View


நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு தவிக்க விட்ட மகன்கள் மீது வயதான பெற்றோர் கண்ணீருடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டை அருகே காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த 88 வயதான பெருமாள், அவரது மனைவி குழந்தை அம்மாள். இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மகன்கள் காளியப்பன், தங்கராஜ், முருகன் ஆகியோர் ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் 7 வருடங்களாக சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிப்பதாகவும், பத்திரத்தை ரத்து செய்து சொத்தை மீட்டு மாற்றி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்