பணம் கேட்டு தராததால் வெறி தீர அடித்தே கொன்ற மகன் - இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை

Update: 2023-03-09 12:43 GMT

கள்ளக்குறிச்சி அருகே முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தவுசு. 65 வயது கூலித்தொழிலாளியான இவரிடம், இவரது மகன் ஜெயராமன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், பணம் தர மறுத்த தந்தையை ஜெயராமன் சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திவந்த போலீசார், முதியவரின் மகன் ஜெயராமனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்