பறிபோன உயிர்... ஆத்திரத்தில் டாஸ்மாக் மீது கல்வீசி பெண்கள் போராட்டம் - பரபரப்பு காட்சி
- சிவகங்கையில் டாஸ்மாக் கடை முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடலுடன், அந்த கடைக்கு எதிராக கல்லெறிந்து உறவினர்களும்,பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிவகங்கை அகிலாண்டபுரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடை முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு நேரிட்ட விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த முசாபர் கனி என்பவர் பலத்த காயமடைந்தார்.
- மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
- அவருடைய உடல், சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை முன்பு, அமரர் ஊர்தியை நிறுத்திய உறவினர்களும், அப்பகுதி மக்களும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடத்தில் ஈடுபட்டனர்.
- அப்போது சில பெண்கள், டாஸ்மாக் கடை மீது கல்லெறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
- சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, டாஸ்மாக் மேலாளர் கடையை மூடிய பிறகே, உடலை எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.