போபலில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜெயஸ்ரீ சென்னை வந்தடைந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜெயஸ்ரீக்கு குடும்பத்தினரும், குத்துச்சண்டை சங்கத்தினரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜெயஸ்ரீ, தமிழகத்தில் குத்துச்சண்டை பயிற்சிக்கான வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.