"புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பாக். பிரதமர் திறக்க வேண்டுமா?"காங்.,மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு..
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்கக்கூடாது என்றால், பாகிஸ்தான் பிரதமர் திறக்க வேண்டுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்ய பிரமோத் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். மோடியை எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும், நாட்டை எதிர்க்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். விழாவை புறக்கணித்துள்ள முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆச்சார்ய பிரமோத் கேட்டுக்கொண்டுள்ளார்.