"ஒரு அரசியாக வராமல் தாயாக வந்திருந்தார்" எலிசபெத் ராணி பற்றி கமல்ஹாசன் பேட்டி

Update: 2022-09-09 08:18 GMT

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த காட்சி அப்போது பேசிய அவர், உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலகத் தலைவர் தான் அவர். காலனி மனப்பான்மையில் இருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

அந்த நேரத்தில் அவர்கள் வந்த தேதியும் அவர் முன்பே அறிவிக்கப்பட்ட தேதி மருதநாயகம் அவர்களை காலனிய ஆட்சி வருவதற்கும் முன்னாள் தூக்கில் இடப்பட்ட அதே தேதியில் இங்கு வந்தார்.

அப்போதுதான் அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். நாங்கள் பேசிய வசனங்கள் எல்லாம் காலனி ஆட்சிக்கு எதிரான வசனங்களை நாங்கள் இது தான் பேச போகிறோம் என்று அமர்ந்திருந்தார்.

அதை அவர் மனப்பான்மையும் அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த ஒரு அரசி ஆக வராமல் ஒரு தாயாக இங்கு வந்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. நானும் அங்கு சென்று பக்கிங்காம் மாளிகையில் அவரை சந்தித்தேன்.

புதிய உலகை அனுபவித்து நீண்ட நாட்கள் வாழ்ந்து உலகத் தலைவர்களில் ஒருவர் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பார்க்காத உலக சரித்திரம் ஒன்றுமில்லை சொல்லுமளவிற்கு அனைத்து மாற்றத்தையும் பார்த்து அனுபவித்து அதற்கான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்லி மறைந்திருக்கிறார். அனுதாபங்கள் பிரிட்டிஷருக்கு என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்