மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து, சேவை கட்டணத்தையும் உயர்த்திட மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.
மின் இணைப்பு பெற இதுவரை 500 ரூபாயாக இருந்த ஒருமுறை மின் இணைப்பு கட்டணம், இனி 1000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
750 ரூபாயாக இருந்த மும்முனை இணைப்பு கட்டணம், இனி ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல் உயர் அழுத்த மின் இணைப்பு கட்டணம் ஆயிரத்து 500 லிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மின் மீட்டரை மாற்றி அமைத்தல், வேறு இடத்திற்கு மாற்றுதல், பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு 500 முதல் 2 ஆயிரம் வரை சேவை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில்,
இனி ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை என இரு மடங்காக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார மீட்டர் பொறுத்திட வைப்பு நிதிக்கு பதில், மாதம் 90ரூபாய் முதல் 140ரூபாய் வரை வாடகை வசூலிக்க மின்சாரத் துறை உத்தேசித்துள்ளது.
இது போன்ற இதர கட்டணங்களை 2023ல் இருந்து 2027 வரை ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ளவும் தமிழக அரசு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆண்டிற்கு அதிகபட்சம் 6 விழுக்காடு இந்த கட்டணங்களை உயர்த்தலாம். 5 ஆண்டுகளில், மின்சார பயன்பாட்டு கட்டணம் அல்லாத இதர கட்டணங்கள் மட்டும் 30% வரை உயர்ந்திட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.