செந்தில் பாலாஜி விவகாரம் - "ஆளுநர் எடுத்த முடிவு சரி" அன்புமணி அதிரடி பதில்
போக்குவரத்து துறையில் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பி.எஃப், கிராஜுவிட்டி மறுக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டூரில், படுகொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காளியின் உருவப் படத்தை திறந்து வைத்த அவர், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி கூறினார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் எடுத்த முடிவு சட்டத்தின்படி தவறு என்றும், தார்மீக அடிப்படையில் சரி என்றும் தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர்களுக்கு பிஎஃப், கிராஜுவிட்டி வழங்க முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார்.