வடக்கு மெக்சிகோவில் தேங்காய்க்குள் மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. ஃபென்டனில் அடங்கிய போதைப் பொருளை தேங்காய்க்குள் வைத்து மறைத்து கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.