"பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்.." கொந்தளித்த பொதுமக்கள்... கடையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

Update: 2023-03-16 12:21 GMT
  • கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில், ஸ்டேஷனரி கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி ஒருவர் பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் பென்சில் வாங்க சென்றுள்ளார்.
  • அங்கு, கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பெற்றோரிடம் சிறுமி புகாரளித்துள்ளார்.
  • இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் பகுதி மக்கள் கடையை அடித்து நொருக்கி, நடராஜனை கட்டி வைத்துள்ளனர்.
  • இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்