கடையில் வாங்கிய 5 ரூபாய் கடலை பாக்கெட்... தொண்டையில் சிக்கிய ஸ்டேப்ளர் பின் - நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவன்
பள்ளி மாணவன் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு திண்பண்டங்கள் மீது 'ஸ்டேப்ளர் பின்' அடிப்பதை தவிர்க்க கோரி, பள்ளி மாணவன் நூதன முறையில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளான்.
வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வக் நித்தின் என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அளித்துள்ள மனுவில், தான் கடந்த சில தினங்களுக்கு முன் 5 ரூபாய் கடலை பாக்கெட் வாங்கி சப்பிட்டதாகவும், அதில் இருந்த ஸ்டேப்ளர் பின் தொண்டையில் சிக்கி கடும் வலியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, சிறுவர்கள் தின்னும் திண்பண்டங்களை விற்பனை செய்யும் போது, ஸ்டேப்ளர் பின் அடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்