டீச்சரிடம் போட்டு கொடுத்ததாக நினைத்து லீடரை சரமாரியாக தாக்கிய சக மாணவர்கள் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-03-05 05:22 GMT
  • கேரளாவில் பிளஸ் ஒன் மாணவனை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • கண்ணூர் மாவட்டம் தலச்சேரியிலுள்ள பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பை புறக்கணித்து விட்டு வெளியே சென்றது ஆசிரியர் கவனத்திற்கு வந்துள்ளது.
  • இதன்பேரில் அந்த மாணவர்களை ஆசிரியர் கண்டிக்கவே, சக மாணவன் ஷமில் தான் ஆசிரியரிடம் புகார் சொன்னதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஷமிலை சரமாரியாக தாக்கினர்.
  • இதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் நடத்திய மாணவர்கள் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
Tags:    

மேலும் செய்திகள்