பள்ளி மாணவி பாலியல் வழக்கு - களமிறங்கிய சிபிசிஐடி போலீசார்... அடுத்தடுத்த அதிரடி...
பரமக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையில், பரமக்குடி பகுதியை சேர்ந்த அதிமுக நகர அவைத் தலைவர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, பாலியல் வழக்கில் ஈடுபடுத்திய வழக்கில் உமா மற்றும் கயல்விழி ஆகியோரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில், சிறைச்சாலையில் இருந்த 5 பேரும், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 3 நாள் விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்.