விண்ணில் பாயும் அரசு பள்ளி மாணவிகள் தயாரித்த செயற்கைக்கோள் பாகங்கள் - இஸ்ரோவில் 2ம் முறையாக சாதனை

Update: 2023-02-09 02:12 GMT

இஸ்ரோவுக்கு இரண்டாவது முறையாக செயற்கைக்கோள் பாகங்கள் தயாரித்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

75வது சுதந்திர தினத்தை ஒட்டி, அசாதி சாட் மென்பொருள் தயாரிப்பதற்காக நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. வான்வெளி அறிவியலில் பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில், செயற்கைக்கோள் மென்பொருட்கள் தயாரிக்க மாணவிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தயாரித்த ஆசாதி சாட்-1 செயற்கைகோள், எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே நிறுவனத்துடன் இணைந்து 50 கிராம் எடையுள்ள பேலோடு-ஐ வெற்றிகராமாக தயார் செய்து திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இஸ்ரோவுக்கு அனுப்பினர். அந்த பேலோடு, ஆசாதி சாட்-2இல் பொருத்தப்பட்ட நிலையில், வரும் 10-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்