அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. சபரிமலை ஐயப்பன் கோயில் 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்

Update: 2022-12-10 13:56 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால சீசன் துவங்கிய பின் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சரங்குத்தி வழியாக பக்தர்கள் திருப்பி விடப்பட்டதால் பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்தனர். இதனால் முதியவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பெரிய நடைப்பந்தலில் பிஸ்கட், மூலிகை குடிநீர் வழங்கப்பட்டாலும், அது அனைவருக்கும் கிடைக்கவில்லை. கூட்டத்தால் நேற்று மதியம் நடை அடைப்பது பகல் 1மணிக்கு பதிலாக 1:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், நேற்று ஒரே தினத்தில் அதிகபட்சமாக 97 ஆயிரத்து 500 பேர் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்