பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
- பங்குனி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14ஆம் தேதி திறக்கப்பட்டு, 19ஆம் தேதி அடைக்கப்பட்டது
- . பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
- ஆழிகுண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்ட பிறகு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பங்குனி ஆராட்டு திருவிழா நடைபெறும் நாட்களில், அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
- பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், முக்கிய நிகழ்வான பங்குனி ஆராட்டு திருவிழா, ஏப்ரல் 5ஆம் தேதி பம்பையில் நடைபெறும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.