சபரிமலையில் விமரிசையாக நடைபெற்ற படி பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2023-01-20 06:56 GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற படி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Full View

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்திலும், மாத பூஜை நாட்களிலும் தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்காக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜை காலம் முடிந்து நடை சாத்தப்படுவதை ஒட்டி, வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு படி பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதற்காக 18-ஆம் படி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொரு படியிலும் கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. 18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தும் பூஜை நடத்தப்படுவதால், படி பூஜையை காண்போருக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனை தந்திரி கண்டரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி குழுவினர் நடத்தினர். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்