"பெலாரசுக்கு அணு ஆயுதங்களை நிறுத்தப்போகிறோம்"- ரஷ்ய அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு

Update: 2023-03-27 03:16 GMT
  • பெலாரசை, அணு ஆயுத பணய கைதியாக ரஷ்யா வைத்திருப்பதாக, உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
  • இரு நாடுகளுக்கு போர் நீடித்து வரும் நிலையில்,
  • நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.
  • இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் புதின், நட்பு நாடான பெலாரசில் முக்கியமான அணு ஆயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
  • இதுதொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
  • இதனிடையே, பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷ்யா வைத்திருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் டேனிலோவ் குற்றம்சாட்டி உள்ளார்.
  • புதினின் அறிவிப்பு பெலாரஸ் மக்களிடையே ரஷ்யா மீதான எதிர்மறையான கருத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்