சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, சிறுவனை கடத்தித் திருமணம் செய்த கல்லூரி மாணவியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே உள்ள செங்கரடு பகுதியை சேர்ந்த சிறுவன், தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில், கல்லூரி மாணவன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த மாணவனுடன் இளம்பெண் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், மேச்சேரி பகுதியை சேர்ந்த வாசுகி என்பதும், மாணவனுடன் அதே கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அப்போது மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதங்கள் இருந்ததால், சிறுவனை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.