ரூ.130 தக்காளி வெறும் ரூ.60.. அதிக விலையை குறைக்க எளிய வழி - "இது தெரியாமல் வாங்காதீங்க..!"
கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி 130 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், கூட்டுறவுத்துறை சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி வாங்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேனாம்பேட்டை டியுசிஎஸ், அண்ணாநகர், ஆர் கே சாலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பண்ணை பசுமை கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு தலா 2 முதல் 3 கிலோ வரை தக்காளி விற்கப்படுகிறது. பொதுமக்களுக்கு மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்ய ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.