மகளிருக்கு மாதம் ரூ.1000 - "போனை செக் பண்ணிக்கோங்க..." - வெளியான அறிவிப்பு

Update: 2023-07-25 10:12 GMT

மகளிர் உரிமைத் திட்டத்திற்காக பெறப்படும் விண்ணப்பங்கள் மென்பொருள் மூலம் மின்னணு முறையில் பரிசீலிக்கப்படுகிறது.மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலி வழியாக நேரடியாகப் பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களுக்கு இதற்கெனப் பயனாளர் கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கைப்பேசி செயலி வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்கள் தங்களது கைப்பேசியில் இந்தச் செயலியை நிறுவி பயனாளர் கடவுச்சொல் வழியாக Login செய்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்கிறார்கள். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான தகவல், விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு தகுதியான முறையில் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளது. பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கைப்பேசியில் விண்ணப்பம் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்த குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் நிராகரிப்புக்கான காரணத்தை

Tags:    

மேலும் செய்திகள்